Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகள் படிக்கும் அறையை எவ்வாறு பார்த்துக்கொள்ளவேண்டும்...?

குழந்தைகள் படிக்கும் அறையை எவ்வாறு பார்த்துக்கொள்ளவேண்டும்...?
குழந்தைகள் படிக்கும் அறையை வாஸ்துப்படி அந்த அறையை அமைப்பது இன்றியமையாதது. அதாவது வாஸ்துப்படி நம் வீட்டில் படிக்கும் அறை மேற்கு திசையில் அமைக்க வேண்டும்.


இது மட்டுமல்லாமல் நாம் உட்கார்ந்து படிக்கும் நாற்காலியை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்குமாறு அமைத்து படிக்க வேண்டும்.
 
இப்படி அமைக்கும் போது தவறாமல் நாற்காலி தெற்கு திசையை ஒட்டினாற்போன்று இருக்க வேண்டும். மேலும் படிக்கும் அறை பச்சை அல்லது மஞ்சள் நிறத்துடன் இருப்பது நல்லது.
 
இப்படி வாஸ்துப்படி வீடு கட்டினால் தான் நமது கல்வியில் மிகப்பெரிய  முன்னேற்றத்தை காண முடியும். குழந்தைகளுக்கான படிக்கும் அறை வீட்டின் வடகிழக்கு பகுதியில் அமைவது சிறப்பான பலன்களை அளிக்கக்கூடியதாகும்.
 
வடகிழக்கில் உள்ள படிக்கும் அறையில் கிழக்கு நோக்கி படிக்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி சிறப்பாக செயல்படுகிறது என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.
 
அவ்வாறு வடகிழக்கு பாகத்தில் படிக்கும் அறையை அமைக்க இயலாவிட்டால், அந்த பகுதியை ஒட்டிய வடக்கு அல்லது கிழக்கு பகுதியில், கிழக்கு நோக்கி படிக்குமாறு அறையை அமைத்துக்கொள்ளலாம்.
 
படிக்கும் அறையின் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் அகலமான ஜன்னல்கள் இருப்பது முக்கியமானது. குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு, டேபிள் மற்றும் சேர்களை அமைக்க வேண்டும்.
 
பொதுவாக, குழந்தைகள் படிக்கும் அறையில் கனமான பொருட்கள் எதுவும் வைக்கப்படக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (29-11-2021)!