பல பெண்களுக்கு ஏற்படும் இந்த முறையற்ற மாதவிடாய்க்கு அவர்களின் உடலின் ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் மாற்றங்களே காரணாமாக இருக்கிறது.
இரவில் எள்ளு விதைகளை தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை பருகினால் பலன் அடைவது நிச்சயம். சீரக விதையின் மாவை நீரில் ஊறவைத்து அந்த நீரை பருகினால் மாதவிடாயின் போது வயிற்று வலி போன்ற உபாதைகள் இருக்காது. இதில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளதால் மாதவிடாயின் போது இரம்பு சத்து குறைப்பாடு நிகழ்ந்தால் இந்த விதைகள் காக்கும்.
பப்பாளியை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடைபெறும். மெனோபாஸ் பிரச்சனைகளுக்கான சரியான தீர்வு பப்பாளி.
ஈஸ்ட்ரோஜனை ஒழுங்காக செயல்பட வைக்க செம்பருத்தி பூ உதவும். இதனால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக இருக்கும்.
ஒரு மேசைக்கரண்டி தேனுடன் சம அளவில் துளசி சாற்றை எடுத்து கொண்டால் இதன் மருத்துவ குணத்தை முழுமையாக அடைய முடியும். இதனால் மாதவிடாயின் போது வரும் கீழ் முதுகு வலி சீராகும்.
கற்றாழை ஜெல்லை தேனுடன் கலந்து தினமும் காலையில், சாப்பிடுவதற்கு முன் இதனை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக மாதவிடாய் சார்ந்த கோளாறுகள் குணமடையும்.