Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஸ்து படி எப்படி கழிவறை அமைப்பது?

வாஸ்து படி எப்படி கழிவறை அமைப்பது?
, திங்கள், 7 மே 2018 (18:50 IST)
ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தை தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது போல, தன் உடம்பை ஆரோக்கியமாக வைக்க, உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை ஆகும்.

 
அப்படி அமைக்கப்படும் கழிவறை, வாஸ்து சாஸ்திரப்படி அமைந்தால் நமக்கு நன்மைகள் கிட்டும். எனவே, அது எப்படி என்பது பற்றி இங்கு காண்போம். 
 
கழிவறை அமைக்கும் முறை:-  
 
* ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும்  
 
* கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை (Closet)- யை வடக்கு <---> தெற்கு ஆகத்தான் அமைக்க வேண்டும்    
 
* கழிவறையின் தரைத் தளம், வீட்டின் தரைதளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது  
 
* மேல்மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத்தளம் உயராமல் இருக்க, அதன் தளத்தை 1 அடி பள்ளமாக (Sunken Type) அமைப்பது சிறந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெய்வ வழிபாட்டுக்குரிய கண்ணனுக்கு பிடித்த துளசி