இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அனைவருக்கும் கார், மோட்டார்க் சைக்கிள் போன்ற வாகனங்கள் கண்டிப்பாக தேவையான ஒன்றாகிவிட்டது. நமது நேரத்தை மிச்சப்படுத்தவும், சொகுசாக பயணிக்கவும் இவை உதவுகிறது. இந்த வாகனங்கள் அடிக்கடி பழுதாகி தொல்லை கொடுப்பதும் உண்டு.
நம்முடைய வீட்டில் வாகனங்கள் நிறுத்துமிடத்தை வாஸ்து முறைப்படி அமைத்து கொள்வதன் மூலம் இந்த தொந்தரவில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ள முடியும்.வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில் வகனங்களை தினமும் நிறுத்தி வைத்து எடுத்து செல்ல கூடாது.
இதே போல் வடக்கு பாகத்தில் வாகனங்களை மாதக் கணக்கில் நிறுத்தி வைக்கவும் கூடாது. இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைப்பதால் அவை அடிக்கடி பழுதாகும் வாய்ப்புள்ளது. சிலர் வாகனங்களை விற்று விடும் நிலைக்கும் தள்ளப்படிவர்.
பழுதடைந்த நிலையில் உள்ள வாகனங்களை தென்மேற்கு. தெற்கு, மேற்கு, பகுதிகளில் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். வடகிழக்கு பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஷெட் அமைக்கக் கூடாது. ஏனென்றால் ஈசானியத்தில் பாரத்தை ஏற்றக் கூடாது. மேலும் வாகனங்களின் எண்ணெய், கீரிஸ் போன்ற அசுத்தமும் இப்பகுதியில் இருக்கக் கூடாது.
வீட்டின் வடமேற்கில் வாகனம் நிறுத்தும் இடத்தை கட்டலாம். ஆனால் அது வடக்கு சுற்று சுவரை தொடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதே போல வீட்டின் தென்கிழக்கு தென்மேற்கிலும் வாகன நிறுத்தம் இடம் அமைக்கலாம்.
இப்படி வாஸ்து முறைப் படி வாகன நிறுத்தும் இடம் அமைப்பதன் மூலம் வாகன விபத்தை கூட தவிர்க்கலாம். வாகனங்கள் அடிக்கடி பழுதாவதையும் தடுக்க முடியும்.