Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஸ்துப்படி தெற்கு திசை பார்த்த வீடு எப்படி இருக்கும்...?

Webdunia
தெற்கில் தெரு இருந்து தெற்கு திசை நோக்கித் தலைவாசல் அமைக்கும்போது, கிழக்கிலிருந்து மேற்காக வீட்டின் சுவரை ஒன்பது பகுதிகளாக்கி, கிழக்கிலிருந்து  முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களுக்கும் பங்கிட வேண்டும். 

சந்திரன் அல்லது புதன், குரு, சுக்கிரன் பகுதியில் தலைவாசல் வைத்துக் கொள்வது நன்மைகள் தரும். தெற்குத் திசையில் தலைவாசல் இருக்கும்போது, அதற்கு நேராக வடக்கில் ஒரு வாயில் இருக்க வேண்டும். தெற்கில் மட்டும் ஒரு வாயில் அமைக்கக் கூடாது. மேற்கு வாயில் வைக்கக் கூடாது.
 
இந்தத் திசையில் வாயில் வைக்கும்போது வாயில் தென்மேற்குத் திசையை நோக்கி வைத்தால் பகைவரால் துன்பம், குலநாசம் அகால மரணம் போன்ற துன்பங்கள் ஏற்படும் தென்கிழக்குத் திசை நோக்கி அமைத்தால், நெருப்பால் அல்லது ஆயுதத்தால் தீங்கு எனப் பல துன்பங்கள் தரும். எனவே, சரியாகத் தெற்கு நோக்கியே  அமைக்க வேண்டும்.
 
தெற்கு நோக்கிய வீட்டில் தெற்குப் பகுதி வீட்டை உயர்த்தி மாடி கட்டி வசித்தால் செல்வம் மிகும். தெற்கு வாசல் வீட்டிற்கு மழைநீர் மற்றும் வீட்டில்  உபயோகிக்கும் நீர் முதலியவை வடக்கு நோக்கிச் செல்லும்படி நீரோட்ட வழி அமைக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் காலியிடம் அதிகமிருந்தால் ஆண் சந்ததி  உண்டு. வடக்கில் காலி இடம் அதிகமிருந்தால் செல்வச் செழிப்பு உண்டு.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments