Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50 வீடுகளில் வெடித்து சிதறிய மின்சாதனங்கள்: சென்னை அருகே பரபரப்பு

50 வீடுகளில் வெடித்து சிதறிய மின்சாதனங்கள்: சென்னை அருகே பரபரப்பு
, ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (16:47 IST)
50 வீடுகளில் வெடித்து சிதறிய மின்சாதனங்கள்:
சென்னையில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் என்ற பகுதியில் உள்ள மகாலட்சுமி குடியிருப்பில் இருந்த 2 மாடி கட்டிடம் கடும் சேதம் அடைந்து அங்கு உள்ள மின் சாதனங்கள் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இன்று அதிகாலை பெய்த மழையின் போது திடீரென இரண்டு மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகே வைக்கப்பட்டிருந்த மின்பிளக்குகளில் மீது இடி இடித்தது. இதனை அடுத்து அந்த குடியிருப்பில் இருந்த சுமார் 50 வீடுகளில் இருந்த மின்சாதனங்கள் வெடித்து சிதறியது. டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், கம்ப்யூட்டர் உள்பட அனைத்து பொருள்களும் வெடித்து சிதறியதையடுத்து அந்த கட்டிடம் முழுவதும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது
 
அந்த அடுக்குமாடி குடியிருப்பு மட்டுமின்றி அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டதாகவும், அதுமட்டுமின்றி கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் தங்களுக்கு மின் இணைப்பு இல்லாததால் உடனடியாக மின் இணைப்பு சரி செய்து தர வேண்டும் என்றும் அந்த குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
 
மேலும் மோட்டார் உள்பட அனைத்து மின்  சாதனங்களும் பழுதடைந்து உள்ளதால் அடிப்படைத் தேவையான தண்ணீர் கூட தங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து அருகில் உள்ள காவல் துறையினர் வந்து சோதனை செய்து பார்த்து வழக்கு பதிவு செய்து அதன் பின்னர் உடனடியாக மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்
 
சுமார் 50 வீடுகளில் 300க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வரும் நிலையில் அந்த குடியிருப்பில் திடீரென இடி இடித்ததால் மின்சாதனங்கள் வெடித்தும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது என்பதால் அந்த பகுதியினர் பெரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர்!