பேக்கிங் சோடாவை ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து கரைகளை நீக்கலாம். குழாய்களை பளிச்சென்று மிண்ணச் செய்ய பேக்கிங் சோடாவை எலும்மிச்சை சற்றுடன் கலந்து தெய்க்கவும்.
பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சுற்றம் செய்ய பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்ள் குழந்தைகளின் துணிகளை டிடெர்ஜெண்ட் பயன்படுத்தமல் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி சுற்றம் செய்யலாம்.
இது சமையல் பொருட்களை மென்மையாகவும், மொறுமொறுப்பாகவும், உப்பவும் பயன்படுகிறது. இட்லி மாவை புளிக்க வைக்கவும், கேக், பிஸ்கட், ரஸ்க், பிரட் போன்ற பேக்கரி வகைகளை தயார் செய்யவும் பெருமளவில் பயன்படும்.
பேக்கிங் சோடாவில் ஆன்டி- ஆசிட் இருப்பதால் நம் உடலில் ஏற்படும் அமிலத்தன்மை அதிகரிப்பால் உண்டாகும் பிரச்சனைகளை தடுத்து நிறுத்தி சீர் செய்வதற்கு உதவி புரிகிறது. எனவே இதை தண்ணீரில் சிறிதளவு சேர்த்து குடிக்கலாம்
பேக்கிங் சோடாவை பற்களின் மேல் தெய்த்தால் பற்களை வெண்மைப்படுத்தலாம். வாரம் ஒரு முறை பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை பளிங்கு போல் மின்னச் செய்யும்.
பேக்கிங் சோடாவில் இருக்கும் அதிக அளவு சோடியம் எல்லோருக்கும் ஏற்றது அல்ல. அதனால் இதனை உபயோகிக்கும் பொழுது அதிக கவனத்துடன் இருப்பது அவசியம். பேக்கிங் சோடாவை மிக மிகக் குறைந்த அளவே நீங்கள் பயன்படுத்தி பலன்பெற முடியும்.