Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேய்மிரட்டி மூலிகை எந்த நோய்களுக்கெல்லாம் நிவாரணம் தருகிறது தெரியுமா?

Advertiesment
பேய்மிரட்டி மூலிகை எந்த நோய்களுக்கெல்லாம் நிவாரணம் தருகிறது தெரியுமா?
பேய்மிரட்டி இலையை நீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடிக்கச் சீத வாதசுரம், முறை சுரம், மலக்கழிச்சல் தீரும். ஒரு பிடி நெற்பொறி, 2 இலை நீரில் காய்ச்சி மணிக்கு ஒருமுடக்குக் கொடுத்து வரக் காலரா தீரும்.

பசி மிகுத்தல், குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல், காச்சல் தணித்தல், சதை நரம்பு ஆகியவற்றைசுருங்கச் செய்தல், அசிவு தணித்தல் ஆகிய குணங்களையுடையது.
 
இலையைக் கொதிக்க வைத்து வேது பிடிக்க விடாத வாதசுரம் தீரும். இலைச் சாற்றை 5 துளி வெந்நீரில் குழந்தைகளுக்குக் கொடுக்க பல் முளைக்கும்போது  ஏற்படும் பேதி தீரும்.
 
10 கிராம் மிளகையும் 3 கிராம் ஓமத்தையும் புது சட்டியிலிட்டுவறுத்துக் கருகிய சமயம் அரை லிட்டர் நீர் சேர்த்துகொதிக்கும் போது 40 கிராம் பேய் மிரட்டி  இலைகளைச்சிதைத்துப் போட்டு 125 மி.லி. யாகக் காய்ச்சி 15 மி.லி.யாக மூன்று வேளை கொடுத்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம்  குணமாகும்.
 
இந்த இனத்தில் இலை நீளமாக இருப்பதை இரட்டைப் பைய்மிரட்டி என்றும் இலை வட்டமாக இருப்பதை ஒற்றைப் பேய் மிரட்டி என்றும் கூறுவதுண்டு. இவை  முறையே ஆண் பெண் எனக் கருதப் படுகின்றன. ஆண் பிள்ளைகளுக்குக் காணுகின்ற நோயிக்கு பெண் இலையும் பெண்களுக்குக் காணுகின்ற நோய்களுக்கு ஆண்  இலையும் சிகச்சைக்கு ஏற்றது என்பது அறிவாளர்களின் கருத்து.
 
பேய்மிரட்டியின் இலையானது வெதுப்படக்கும் என்றும் வெளுப்பான பேதி, கிலேஷ்மகிரகணி, தாபம், ரூட்சை, அள்ளு மாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், ரத்த  தாதுவிலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றைப் போக்கும் என்க.
 
பேய்மிரட்டியின் பச்சிலையை அகல் விளக்கின் திரியாகப் போட்டு விளக்கேற்றி வைத்தால் பச்சை இலை எரிகிறது. உண்மைதான். சந்தேகம் உள்ளோர் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலன்தரும் வெட்டிவேரை பயன்படுத்தும் விதமும் நன்மைகளும் !!