Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவிகளுக்கு சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (16:39 IST)
பிஸ்கட்டுகள் நமுத்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரை போட்டு, மூட்டை போல் கட்டி, பிஸ்கட் டப்பாவில் போட்டு விடுங்கள்.


பேகான் ஸ்பிரே பாட்டிலுக்குள், ஊதுபத்தியை போட்டு எடுத்து, ஏற்றி வைத்தால், கொசுக்கள்,  பூச்சிகள் அண்டாது.  சர்க்கரையுடன் ஒன்றிரண்டு கிராம்புத் துண்டுகள் போட்டால், எறும்பு வராது.

கறிவேப்பிலை இலைகளை அரிசியுடன் போட்டு வைத்தால், பூச்சிகள், வண்டுகள் எட்டிக் கூட பார்க்காது.

பாயசம் நீர்த்துவிட்டால் எந்த பாயசமாக இருந்தாலும் சரி இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது பால் பவுடர் கரைத்து பாயசத்தில் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டால் பாயசம் கெட்டியாகிவிடும்.

சாதம் வேகாமல் நறுக்கரிசியாக இருந்தால், சாதத்தின் மேல் சிறிது தண்ணீரை தெளித்து குக்கரில் வைக்கவும். ஆவி வந்ததும்,”வெயிட்’ போட்டு உடன் அணைத்து விடவும்.சத்தம் அடங்கியவுடன் குக்கரை திறந்தால் சாதம் பூவாக வெந்து இருக்கும்.

சில சமயங்களில் தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால், சாதம் நிறம் சற்று மங்கலாக இருக்கும். அப்போது அரிசி களைந்து குக்கரில் வைக்கும் போது சில சொட்டு எலுமிச்சை சாறு விட்டு வைத்தால், சாதம்பொலபொலவென்றும் வெண்மையாகவும் இருக்கும்.

ரசத்தில் புளி குறைந்துவிட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால் போதும். 1/4 டீஸ்பூன் பொடி தேவையான புளிப்பை தந்துவிடும்.

தோசைமாவு, இட்லி மாவு மிகவும் புளித்துவிட்டால்,ஒரு டம்ளர் பால் ஊற்றினால் போதும் புளிப்பை போக்கிவிடும்.

வெயில் காலத்தில் பால் திரிந்து போகாமல் இருக்க, பாலுடன் நான்கைந்து நெல் விதைகளைப் போட்டு வைக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments