Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய டிப்ஸ் !!

Advertiesment
குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள சில எளிய டிப்ஸ் !!
அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.

இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் D-யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
 
பழைய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
 
மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
 
சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
 
பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
 
உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
 
ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
 
துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...!!