Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான வெஜ் புலாவ் செய்வது எப்படி...?

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (16:20 IST)
தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப்
பொடித்த முந்திரி - ஒரு டேபிள் ஸ்பூன்
துண்டு களாக்கிய முந்திரி - கால் கப்
மிளகுத் தூள், சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு - தலா 1
நெய், உப்பு - தேவையான அளவு



செய்முறை:

அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊறவிடவும். குக்கரில் நெய் விட்டு, துண்டு களாக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு, அதே நெய்யில் ஏலக்காய், கிராம்பு தாளித்து, ஊறிய அரிசியைப் போட்டு வறுக்கவும். மிளகுத் தூள், சீரகத் தூள், பெருங்காயத் தூள், பொடித்த முந்திரி, உப்பு சேர்த்துக் கிளறி தண்ணீர் விட்டு குக்கரை மூடவும்.

மிதமான தீயில் வேகவைத்து ஒரு விசில் வந்ததும் சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆவி போனதும் மூடியைத் திறந்து, வறுத்த முந்திரியைப் போட்டு மெதுவாகக் கிளறிப் பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments