பொதுவாகவே மனித இனம் தோன்றியதற்கு அடிப்படை ஆதாரமே நீர்நிலையாகத்தான் இருந்துள்ளது. பல்வேறு நாகரீகங்கள் ஆற்றங்கரையோரங்களில்தான் உருவாகியுள்ளது. மனிதனுக்கு அடிப்படையான நீரும், அதனைச் சார்ந்த நகரங்களும் பற்றி இங்கு பார்ப்போம்.
கெய்ரோ நகரம் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது.
கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் லக்னோ.
ஸ்ரீநகர் ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ளது.
ஏரி மாவட்டம் என அழைக்கப்படுவது செங்கல்பட்டு மாவட்டம்.
ஆக்ரா நகரம் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி புழலேரி.
சீன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள நகரம் பாரிஸ்
ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ளது கொல்கட்டதா நகரம்.
நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.
ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.
நைல் நதியில் காணப்படும் கேட் பிஷ் என்ற மீன்கள் வயிற்றுப் பகுதி மேல் நோக்கி இருக்குமாறு நீந்துகின்றன.