Publish Date: Sat, 09 Jun 2018 (14:46 IST)
Updated Date: Sat, 09 Jun 2018 (14:51 IST)
விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ டிரெய்லர் வருகிற 13ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஹீரோயினாக ‘வனமகன்’ சயீஷா நடித்துள்ளார். இரண்டாவது ஹீரோயினாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.
பாரிஸில் வசிக்கும் டானாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க, பாரிஸிலேயே பிறந்து, வளர்ந்த பெண்ணாக சயீஷா நடித்துள்ளார். எனவே, படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கேயே எடுக்கப்பட்டுள்ளன. விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில், இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம். எனவே, விஜய் சேதுபதியே இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, ஜூன் 13ஆம் நடைபெறும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.