Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதியின் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா?

விஜய் சேதுபதியின் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா?
, செவ்வாய், 30 ஜனவரி 2018 (15:01 IST)
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன். இந்த படத்தில் விஜய்சேதுபதி பல கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் திரையரங்குகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
விஜய் சேதுபதி - கௌதம் கார்த்திக், காயத்ரி, நிகாரிகா கொனிதலா, ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், டேனியல் அனி போப், ராஜ்குமார் உள்ளிட்ட பலரும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்தை '7c's என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்'  தயாரித்துள்ளது.
 
இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி.சத்யமூர்த்தி கூறும்போது, விஜய்சேதுபதி - கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து  சொல்றேன்' படத்தை தமிழகமெங்கும் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியாகிறது. 'கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்' இந்த படத்தை சுமார் 400 திரையரங்குகளில் வெளியிடுகிறது. இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என  கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம்