Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் பணியில் போக்குவரத்து ஊழியர்கள் – இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் !

தேர்தல் பணியில் போக்குவரத்து ஊழியர்கள் – இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் !
, புதன், 27 மார்ச் 2019 (12:48 IST)
முதல்முறையாக தேர்தல் பணியில் அரசு போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது.

வழக்கமாக தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே கலந்துகொள்வர். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்துத்துறை ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்கள் முதல் கண்காணிப்பாளர் வரை பணியில் இருப்பவர்களை வாக்குப்பதிவு அலுவலர் 1,2 மற்றும் 3 ஆகியப்பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்காக அவர்களுக்குப் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. ஏப். 7, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் பயிற்சிகள் நடைபெற இருக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசை வேட்புமனு நிராகரிக்கப்படுமா? திமுக எதிர்ப்பால் பரபரப்பு!