Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெண்கள் வாக்குகளைக் கவர புதுத்திட்டம் – களத்தில் இறங்கும் 1000 மகளிர் குழுக்கள் !

பெண்கள் வாக்குகளைக் கவர புதுத்திட்டம் – களத்தில் இறங்கும் 1000 மகளிர் குழுக்கள் !
, புதன், 27 மார்ச் 2019 (09:13 IST)
தேர்தலில் பெண்களின் வாக்குகளைக் கவர திமுக மகளிர் குழுக்களை அமைத்து அவர்களின் மூலமாக நேரடியாக பெண்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில் சுமார் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் ஒன்று சேர்ந்துள்ளனர். நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியக் கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.  இந்நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து களப்பணிகளில் மும்முரமாக உள்ளன. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இது முக்கியமான தேர்தலாக இருப்பதால் இரு கட்சிகளும் பரபரப்பாக வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பெண்களின் வாக்குகளை அதிகமாகக் கவர திமுக புது வியூகம் ஒன்றை அமைத்துள்ளது. அதன்படி பெண்களிடம் நேரடியாக சென்று வாக்கு சேகரிக்க 1000 சிறப்பு மகளிர் குழுக்களை அமைத்துள்ளது. இந்த குழுக்கள் நேரடியாக வீடுகளுக்கு சென்று பெண்களுக்கான திமுக சிறப்பு திட்டங்கள்  மற்றும் சலுகைகள் ஆகியவைக் குறித்து விளக்கி வாக்கு சேகரிக்க இருக்கின்றனர். மேலும் வாக்குச்சாவடிகளிலும் இந்த பெண்கள் குழு இடம்பெறும் என்றும் அவர்கள் பெண் வாக்காளர்களை வழிநடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திக் சிதம்பரத்துக்கு ஆதரவு – சுதர்சன நாச்சியப்பன் திடீர் பல்டி !