Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமிரு பிடிச்சவன்' திரைவிமர்சனம்

Advertiesment
திமிரு பிடிச்சவன்' திரைவிமர்சனம்
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (18:39 IST)
விஜய் ஆண்டனி நடித்த 'அண்ணாதுரை' , காளி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையிலும் அவருடைய அடுத்த படமான 'திமிரு பிடிச்சவன்' திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா? என்பதை பார்ப்போம்

நீதி, நேர்மை, நியாயம் என்ற கொள்கையுடன் வாழும் சப் இன்ஸ்பெக்டரான விஜய் ஆண்டனிக்கு குறுக்கு வழியில் புகழ், பணம் பெற வேண்டும் என்ற தம்பி உள்ளார். தம்பியை திருத்தும் முயற்சியில் விஜய் ஆண்டனி ஈடுபட, ஆனால் தம்பியோ அந்த பகுதியின் பெரிய ரவுடியிடம் அடியாளாக சேர்ந்து தொடர் கொலைகளை செய்கிறார். இதனால் தம்பி என்றும் பாராமல் என்கவுண்டரில் போட்டு தள்ளும் விஜய் ஆண்டனி, தனது தம்பி போல் அந்த ரவுடியிடம் சிக்கியிருக்கும் சிறுவர்களை மீட்க போடும் திட்டங்களும், அந்த திட்டங்களை வில்லன் தகர்ப்பதும், இறுதியில் வெற்றி பெறுவது யார் என்பதும்தான் இந்த படத்தின் கதை

விஜய் ஆண்டனி போலீஸ் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும், முகத்தில் ஆக்ரோஷமான உணர்வு வரவில்லை. ரொமான்ஸ் காட்சியிலும் விஜய் ஆண்டனி வழக்கம்போல் சொதப்பியுள்ளார். இருப்பினும் இந்த படத்தில் அவரது நடிப்பு முந்தைய படங்களில் இருந்து தேறியுள்ளது.

webdunia
வழக்கமான ஹீரோயின் கேரக்டராக இல்லாமல் இந்த படத்தில் நாயகி நிவேதா பேத்ராஜ், காமெடியிலும் கலக்கியுள்ளார். முதலில் சாதாரண சப் இன்ஸ்பெக்டராக வரும் நிவேதா, விஜய் ஆண்டனியுடன் இணைந்தவுடன் ஆக்சன், காமெடி, ரொமான்ஸ் என கலக்குகிறார்.

பல படங்களில் ஓரிரு காட்சிகளில் அடியாளாக நடித்தவர் தான் இந்த படத்தின் மெயின் வில்லன். ஆரம்பம் முதல் கடைசி வரை உதார் விட்டுக்கொண்டே இருக்கின்றாரே தவிர, விஜய் ஆண்டனியின் திட்டங்களை முறியடிக்க எந்தவொரு புத்திசாலித்தனமான ஐடியாவும் வில்லனிடம் இல்லை.

விஜய் ஆண்டனிதான் இந்த படத்தின் ஹீரோ, தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் எடிட்டர். எந்த பணியையும் அவர் உருப்படியாக செய்யவில்லை. ஒரே ஒரு பாடல் மட்டுமே தேறுகிறது. பின்னணி இசை ரொம்ப சுமார். எடிட்டிங் சுத்த மோசம்

ரவுடி தான் கெத்து என்று பல இளைஞர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கு ரவுட் கெத்து இல்லை, போலீஸ் தான் கெத்து என்று புரிய வைக்கும் முயற்சியாக இந்த படத்தை இயக்குனர்  கணேஷா இயக்கியுள்ளார். அவருடைய நல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் அதே நேரத்தில் திரைக்கதையில் ஓட்டை, லாஜிக் மீறல் ஆகியவை காரணமாக படத்தை முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. ஒரு வித்தியாசமான ஆக்சன் பேக்கேஜாக உருவாகியிருக்க வேண்டிய படம், பலவீனமான திரைக்கதையால் சொதப்பியுள்ளது. நிவேதா  பேத்ராஜ் நடிப்பிற்காக இளைஞர்கள் ஒருமுறை பார்க்கும் படமாக உள்ளது இந்த 'திமிரு பிடிச்சவன்

2.25/5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'வாவ் ’சொல்ல வைக்கும் நியூ மெர்சிடஸ் பென்ஸ் ...