Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காற்றின் மொழி: திரைவிமர்சனம்

காற்றின் மொழி: திரைவிமர்சனம்
, வெள்ளி, 16 நவம்பர் 2018 (10:16 IST)
கடந்த சில ஆண்டுகளாக தனக்கேற்ற சரியான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகாவின் அடுத்த படம் தான் காற்றின் மொழி. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்

காதலான கணவன், பாசமான மகன் என சின்ன வட்டத்திற்குள் குடும்பத்தலைவியாக இருந்து வரும் ஜோதிகாவுக்கு மற்ற பெண்களை போல் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அப்பாவின் மட்டந்தட்டம், சகோதரிகளின் கிண்டலுக்கு பயந்து அந்த ஆசையை மனதிற்குள் அடக்கி வைக்கின்றார். இந்த நிலையில் தற்செயலாக அவருக்கு ஹலோ எப்.எம் வானொலியில் ஆர்ஜே வேலை கிடைக்கின்றது. மனதுக்கு பிடித்த வேலையை சந்தோஷமாக பார்த்து கொண்டிருக்கும்போது இந்த வேலையால் குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சிக்கல்களை ஜோதிகா எப்படி சமாளித்தார் என்பதே இந்த படத்தின் மீதிக்கதை

இந்தியில் வித்யாபாலன் நடித்த கேரக்டருக்கு இணையாக ஜோதிகா தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறும் 'ஹலோ' என்ற செக்ஸியான குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது. ஹவுஸ் வொய்ப் விஜயலட்சுமி, ரேடியோ ஜாக்கி மது என நடிப்பில் கலக்கியிருக்கிறார் ஜோதிகா. காமெடி, செண்டிமெண்ட் கலந்து அருமையான நடித்துள்ள ஜோதிகாவுக்கு பாராட்டுக்கள்

webdunia
ஜோதிகா படம் என்றாலே கணவர் கேரக்டர் டம்மியாக இருப்பதுண்டு. ஆனால் இந்த படத்தில் விதார்த் வித்தியாசமான, அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில காட்சிகளில் வந்தாலும் மனதில் நிற்கிறார் நடிப்பை தந்துள்ள எம்.எஸ் பாஸ்கர், காமெடி நாடிப்பில் மயில்சாமி, மனோபாலா காட்சிகள் சிறப்பு

ஜோதிகாவின் பாஸ் ஆக நடித்துள்ள லட்சுமி மஞ்சு தனது கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல் ராதாமோகன் இயக்கும் அனைத்து படங்களிலும் தோன்றும் இளங்கோ குமாரவேல் இந்த படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.

சிம்பு மற்றும் யோகிபாபு சிறப்பு தோற்றங்கள் படத்திற்கு வலிமை சேர்க்கும்

கிளம்பிட்டாளே விஜயலட்சுமி, ஜிமிக்கி கம்மல் ஆகிய பாடல்களை ரசிக்கும் வகையில் கம்போஸ் செய்துள்ளார் இசையமைப்பாளர் காசிப். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் தரமாக உள்ளது.

மனதுக்கு பிடித்த வேலையை செய்வது ஒரு கொடுப்பினை என்ற அழகான கருத்தை எளிதாக, ஒருசில சம்பவங்கள், காட்சிகள் மூலம் விளக்கியுள்ளார் இயக்குனர் ராதாமோகன். படத்தின் முதல் அரைமணி நேர காட்சிகளும், இரண்டாம் பாதியில் ஒருசில காட்சிகளும் படத்திற்கு சம்பந்தம் இல்லாமால் உள்ளது. இருப்பினும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஒரு நல்ல கருத்துள்ள படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளதால் கண்டிப்பாக பார்க்காலாம்.

ரேட்டிங்: 3/5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வழியாக கரையைக் கடந்த கஜா: பொதுமக்கள் நிம்மதி