சூர்யாவின் 37வது படம் லண்டனில் தொடக்கம்

வியாழன், 31 மே 2018 (13:26 IST)
சூர்யாவின் 37வது படத்தின் ஷூட்டிங், லண்டனில் தொடங்க இருக்கிறது.
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர். இது சூர்யாவின் 36வது படம். இந்தப் படத்தின் ஷூட்டிங், விரைவில் நிறைவடைய இருக்கிறது.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. அவரின் 37வது படமான இதில், மோகன்லால் மற்றும் அல்லு சிரிஷ் இருவரும்  முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், வருகிற ஜூன் 25ஆம் தேதி தொடங்க இருக்கிறது. லண்டனில் தொடங்கும் ஷூட்டிங், அங்கு தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெற இருக்கிறது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு, ‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசு கேவியட் மனு