Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டெர்லைட்; ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த பிரபலங்கள்

Advertiesment
ஸ்டெர்லைட்; ட்விட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்த பிரபலங்கள்
, புதன், 23 மே 2018 (15:14 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று தூத்துக்குடியில் அரங்கேறிய கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 10க்கும்  மேற்பட்டோர் தமிழக போலீசாரால் கொல்லப் பட்டனர். இதற்கு பல தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து இன்றும் பல இடங்களில் போராட்டம், கடையடைப்பு என மக்கள்  தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஜெயம்ரவி தனது ட்விட்டர் தளத்தில், ஒரு உயிரை எடுக்க இன்னொருத்தருக்கு யார் உரிமை கொடுத்தார்கள், அப்பாவி மக்களை கொன்ற இந்த விஷயத்தில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அதே சமயம் மரணமடைந்த குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி  அரசை கண்டித்து தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி, ஜி.வி. பிரகாஷ், தனது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
 
அதில் சட்டமே அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/பாதுகாப்புக்காக வேண்டியே அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால் எதற்கு ஒரு அரசாங்கம்? எனவும், நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் இரத்தம் எழும் வீழாதே என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துகுடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி