Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டெர்லைட் விவகாரம் ; நடிப்பு சுதேசிகள் : திமுகவை விளாசிய ராமதாஸ்

ஸ்டெர்லைட் விவகாரம் ; நடிப்பு சுதேசிகள் : திமுகவை விளாசிய ராமதாஸ்
, புதன், 23 மே 2018 (14:28 IST)
ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

 
11 அப்பாவி பொதுமக்களை பலி கொண்ட ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிப்பு சுதேசிகள் என்ற தலைப்பில் சில பதிவுகளை இட்டுள்ளார்.
 
“ஸ்டெர்லைட் ஆலையில் திமுக சட்டமன்றஉறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவனுக்கு 600 சரக்குந்து ஓடுகின்றனவாம். கோடிகள் கொட்டுகின்றனவாம். ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு திமுக அனுமதி அளிக்குமாம். ஆனாலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுவார்களாம். என்னவொரு நடிப்பு” என ஒரு டிவிட்டும்,
 
ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக அதிதீவிரமாக போராடுவதைப் போன்று வெளியுலகில் குரல் கொடுத்து வருகிறார் ஓர் அரசியல் தலைவர். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் அவரது மருமகன் ஒப்பந்தம் எடுத்து கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டுவதாக சொல்கிறார்கள். இது என்ன வகையான நடிப்பு?” எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு - மக்களை சந்தித்தது குற்றமா?