Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்; பரோலில் வரும் சசிகலா

Advertiesment
நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்; பரோலில் வரும் சசிகலா
, ஞாயிறு, 18 மார்ச் 2018 (16:34 IST)
சசிகலா கணவர் நடராஜன் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 
 
கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடராஜனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் குளோபல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். 
 
தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவரா கலாய்க்கிறார்கள்... நான் டுவிட்டர் பக்கமே செல்வதில்லை; ஸ்மிருதி இராணி