Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபர் 2ல் 'சர்கார்' பாடல்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (18:18 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பு வெளியான ஐந்தே நிமிடங்களில் சர்கார் ஆடியோ ரிலீஸ் குறித்த டுவிட்டர் ஹேஷ்டேக் தமிழக அளவில் டிரெண்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆயிரக்கணக்கான டுவீட்டுகள் பதிவாகி வருவதால் இன்னும் சில நிமிடங்களில் இந்த டிரெண்ட் உலக அளவுக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை
 
ஏ.ஆர்.ரஹ்மானின் 'மெர்சல்' பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனதால் அதேபோல் இந்த படத்தின் பாடல்களும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் திருவிழா பாடல் ஒன்றை ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளதாகவும், அந்த பாடல் 'ஆளப்போறான்' பாடலுக்கு இணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments