Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்கார் படத்தின் கதை இதுதானா? - கசிந்த தகவல்

சர்கார் படத்தின் கதை இதுதானா? - கசிந்த தகவல்
, சனி, 18 ஆகஸ்ட் 2018 (16:50 IST)
இளைய தளபதி விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள சர்க்கார் படத்தின் கதை தொடர்பான செய்தி வெளியே கசிந்துள்ளது.

 
விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இப்படத்தின்  பாடல் காட்சிகள்  அமெரிக்காவில் படமாக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
 
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். அதோடு, வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
 
இந்நிலையில், இப்படத்தின் கதை வெளியே கசிந்துள்ளது.
 
வெளிநாட்டில் பிரபல தொழிலதிபாராக இருக்கும் விஜய், தேர்தலின் போது ஓட்டு போடுவதற்காக தனது சொந்த ஊரான தமிழகத்திற்கு வருவாராம். அப்போது, அவரின் விமானம் தாமதம் ஆகும் சூழ்நிலையில், அவரின் ஒட்டை அரசியல் கட்சியினர் கள்ள ஓட்டாக போட்டு விடுவார்களாம்.
 
இதனால் கோபமடையும் விஜய், இந்த அரசியலை களையெடுக்க வேண்டும் என களம் இறங்குவாராம். குறிப்பாக கள்ள ஓட்டுகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அரசியலில் குதித்து போராடி ஒரு நாட்டில் புரட்சியே ஏற்படுத்துவார் என செய்தி வெளியே கசிந்துள்ளது.
 
ஆனால், இது உண்மைதானா என்பது படம் வெளியாகும் போதே நமக்கு தெரிய வரும். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கருப்பின நடிகர்: ஏற்க மறுக்கும் ரசிகர்கள்