Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம்: புகார் கொடுக்கும் எண் அறிவிப்பு

Advertiesment
ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம்: புகார் கொடுக்கும் எண் அறிவிப்பு
, வெள்ளி, 2 நவம்பர் 2018 (08:18 IST)
தீபாவளி திருநாளை கொண்டாட பெருமளவு சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட பல நகரங்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்வதை அடுத்து ரயில்கள், அரசு பேருந்துகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும் என்பது தெரிந்ததே

இந்த நிலையை பயன்படுத்தி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிட்டத்தட்ட விமான டிக்கெட் அளவுக்கு கட்டணத்தை தாறுமாறாக உயர்த்துவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்திப்பதுண்டு

இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து மதுரை செல்ல சாதாரணமாக ரூ.600 முதல் ரூ.1200 வரை வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் தீபாவளியை முன்னிட்டு ரூ.800 முதல் ரூ.1800 வரை வசூல் செய்வதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல விஷயங்களில் நீதிமன்றங்கள் தானாக முன்வந்து வழக்குகள் பதிவு செய்யும் நிலையில் இதுகுறித்து நீதிமன்றங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம்: புகார் கொடுக்கும் எண் அறிவிப்பு