Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிரடியாக உயரப்போகும் ரயில் கட்டணம் - அதிர்ச்சித் தகவல்

Advertiesment
அதிரடியாக உயரப்போகும் ரயில் கட்டணம் - அதிர்ச்சித் தகவல்
, சனி, 4 ஆகஸ்ட் 2018 (07:47 IST)
ரயில் பயணத்தையே நம்பியிருக்கும் நடுத்தர மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கும் விதமாக ரயில் கட்டணம் விரைவில் உயர உள்ளது.
 
சரியான முன்னறிவிப்பின்றி தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனால், பேருந்தையே நம்பி இருந்த ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்தில் தான் கட்டணம் உயர்வு, ஷேர்  ஆட்டோக்களில் பயணம் செய்யலாம் என நினைத்தால் பஸ் கட்டண உயர்வை பயன்படுத்தி ஷேர் ஆட்டோக்களும் தங்களின் கட்டணத்தை உயர்த்தி அடாவடி செய்து வருகின்றனர். 
 
பேருந்தைக் காட்டிலும் ரயிலில் பாதி கட்டணம் தான் என்பதால் மக்கள் பலர் ரயிலில் செல்வதையே விரும்புகின்றனர். ஆனால் அதற்கும் வந்துவிட்டது ஆப்பு. ஆம் ரயில் கட்டணம் உயரப்போகிறதாம்.
 
ரயில் கட்டணத்தை உயர்த்தி 15 ஆண்டுகள் ஆனதால் பராமரிப்பு செலவுகள், இதர செலவுகள் என ரயில்வே நிர்வாகத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
 
எனவே இதனை ஈடுகட்ட படிப்படியாகவோ அல்லது தமிழக அரசு ஒரே அடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியது மாதிரியோ ரயில் கட்டணமும் உயர உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கருணாநிதியை சந்திக்க சென்ற கமல்!