Publish Date: Wed, 22 Aug 2018 (17:57 IST)
Updated Date: Wed, 22 Aug 2018 (18:23 IST)
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மஹத்-யாஷிகாவை காதலிப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார். ஏனெனில் மஹத் ஏற்கனவே பிராசி என்பவரை காதலித்து வந்தார்.
இந்நிலையில் மஹத் யாஷிகாவை காதலிப்பதை கேள்விப்பட்ட பிராசி அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிரடி பதிவு போட்டுள்ளார். அதில், மஹத் என்னை பிரிய மனம் இல்லை என்று கூறிதான் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள், நான் இப்போது அவருடன் இல்லை, வெளியே வந்தால் நாங்க இரண்டு பேரும் சேர்ந்து பேசி முடிவு எடுப்போம்.
இப்போது யாஷிகாவுடன் காதலில் இருக்கிறார், எனக்கு கஷ்டமாக இருந்துச்சு. ஆனால் இது என் வாழ்க்கையை மாத்திடாது. என்னை நான் பார்த்துக் கொள்வேன். இனி அவரை பற்றி கேள்வி கேட்காதீங்க... என்று பதிவு செய்துள்ளார்.