Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்ப்படம் 2’ இயக்குனரை காட்டமாக திட்டிய பிரபல நடிகை

Advertiesment
லட்சுமி ராமகிருஷ்ணன் | தமிழ் படம் 2 | சிஎஸ் அமுதன் | Tamizh Padam 2 | Lakshmy Ramakrishnan | C S Amudhan
, வியாழன், 12 ஜூலை 2018 (20:53 IST)
ஒரு  திரைப்படம் வெற்றியடைய அடுத்தவர் முதுகில் ஏறி பயணம் செய்வதா? என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ‘தமிழ்ப்படம் 2’ இயக்குனரை காட்டமாக திட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ‘தமிழ்ப்படம் 2’ திரைப்படத்தில் பிரபல தமிழ் சினிமாக்களை மிக அதிகமாக கலாய்த்துள்ளனர். குறிப்பாக கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், விஷால், சூர்யா ஆகியோரின் படங்களையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.
 
இந்த நிலையில் தமிழ்ப்படம் 2’ குறித்தும் இந்தப் படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் குறித்து பிரபல நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக திட்டியுள்ளார். “விரைவில் பணம் சம்பாதிப்பதற்காக இப்படியா அடுத்தவர்கள் முதுகில் ஏறி பயணம் செய்வது? தமிழ் சினிமா துறையில் இன்னும் பல பல நல்ல திறமையான படைப்பாளிகள் இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். இவர் 'தமிழ்ப்படம் 2' படத்தை நேரடியாக கூறவில்லை என்றாலும் அவருடைய டுவீட்டுக்கு இதுதான் அர்த்தம் என்று கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

196 கருணை மதிப்பெண்களுக்கு சிக்கல்: நாளை மேல்முறையீடு செய்கிறது சி.பி.எஸ்.இ?