Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக சாதனைக்காக காத்திருக்கும் அஜித்தின் டிரோன் குழு

Advertiesment
உலக சாதனைக்காக காத்திருக்கும் அஜித்தின் டிரோன் குழு
, வியாழன், 6 செப்டம்பர் 2018 (10:35 IST)
அஜித் என்பவர் ஒரு நடிகரையும் தாண்டி பைக் ரேசர், கார் ரேசர் முக்கியமாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனித நேயம் உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது பங்களிப்பை இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும் கொடுத்துள்ளார். அஜித்தின் ஆலோசனையில் அமைந்த 'தக்சா' என்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் குழு சமீபத்தில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் ஒன்றை உருவாக்கி இந்திய அளவில் முதல் பரிசை பெற்றது.

இந்த நிலையில் தற்போது உலகளாவில் நடைபெறும் டிரோன் போட்டியில் பங்குபெற அஜித் தலைமையிலான 'தக்சா' குழு தேர்வு பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா, தாய்லாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், சீனா ஆகிய குழுவினர்களுடன் இந்தியாவின் சார்பில் அஜித்தின் குழுவும் மோதவுள்ளது.

இந்த டிரோன் ஒலிம்பிக் போட்டியில் அஜித்தின் குழு வெற்றி பெற்றால் அதுவொரு உலக சாதனையாக கருதப்படுவது மட்டுமின்றி இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையிலும் அமையும். ஆசிரியர் தினத்தன்று சொந்தமாக ஒரு டுவீட் கூட போட முடியாதவர்கள் இருக்கும் தமிழ்த்திரையுலகில் இந்தியாவிற்கே பெருமை சேர்க்க காத்திருக்கும் அஜித் குழுவை வாழ்த்துவோம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சாதனைக்காக காத்திருக்கும் அஜித்தின் டிரோன் குழு