அஜித்தின் காலை கழுவினால் அவரது குணத்தில் 10 சதவீதமாவது வரும் என்று மறைமுகமாக சில நடிகர்களை தாக்கி தெலுங்கு நடிகை மீனா கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் 'விஸ்வாசம்' படத்தில் நடித்துவருகிறார். நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துவரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு நடிகை மீனா என்பவர் படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்து அவரோடு புகைப்படம் எடுததுள்ளார்.
அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், ' ஒரு ரசிகரின் தருணம். இதைப் போன்ற ஒரு மனிதரை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை. இனிமையான, எளிமையான மனிதர். ஒரு ஹிட் கொடுத்த பிறகு சில நடிகர்களின் நடத்தையில் மாற்றத்தை பார்க்கிறேன். அத்தகைய நடிகர்கள் அஜித்தின் காலைக் கழுவி தொட்டு வணங்கினால் அவரது குணத்தில் 10 சதவீதமாவது வரும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.