இறைச்சி வியாபாரி ஒருவரை கொன்ற வழக்கில் ஜாமினில் வெளிவந்த கொலைக் குற்றவாளிகளை மத்திய அமைச்சர் மாலை அணிவித்து வரவேற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் மாட்டுக்கறி இறைச்சிக்கு தடை விதித்ததற்கு நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விவசாயத்திற்காக மாடுகளை ஏற்றிச் சென்ற விவசாயிகளை தவறாக புரிந்து கொண்டு, குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த சிலர் அப்பாவி பொது மக்களை அடித்துக் கொன்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம், ஜார்கண்டில் இஸ்லாமிய இறைச்சி வியாபாரியை பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு அமைப்பை சார்ந்த சிலர் அவரை அடித்தே கொன்றனர். இது நாடெங்கும் கடும் அதிவலைகளை ஏற்படுத்தியது. கொலை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இதனை பாஜகவினர் சிலர் கொண்டாடி வருகின்றனர். உச்சகட்டமாக ஹாசாரிபாக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு விமானங்கள் போக்குவரத்து துறை அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா ஜாமினில் வெளிவந்த கொலைக்குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் ஊட்டியும் வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த புகைப்படம் வெளியாகி நாடெங்கும் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமைச்ருக்கு கடும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.