Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குற்றாலத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பது யாருடைய ரிசார்ட்டில் தெரியுமா?

Advertiesment
தினகரன்
, செவ்வாய், 23 அக்டோபர் 2018 (07:29 IST)
அதிமுக எம்.எல்.ஏக்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டில் கூவத்தூரிலும், அதன் பின்னர் தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்த எம்.எல்.ஏக்கள் பெங்களூரிலும் தங்கியிருந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என கூறப்படுவதால் அந்த எம்.எல்.ஏக்களும் குற்றாலத்தில் தங்க வைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் குற்றாலம் ரிசார்ட் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் பழையகுற்றாலம் சாலையில் அமைந்துள்ள இசக்கி ஹைவியூ ரிசார்ட்டில்தான் எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த ரிசார்ட் முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது அமமுக மாநில அம்மா பேரவை செயலாளர் பொறுப்பில் உள்ளவருமான இசக்கி சுப்பையாவுக்குக் சொந்தமானது. மேலும் இவரது மகனுக்குத்தான் தமிழ்க காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மகளை திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடில்கள், குளிர்சாதன அறைகள், சூட் அறைகள் என 30 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ள இந்த ரிசார்ட்டில் தற்போது வெற்றிவேல் தவிர 17 எம்எல்ஏக்கள் தங்கியிருப்பதாகவும் விரைவில் தினகரனும் வெற்றிவேலுவும் இந்த ரிசார்ட்டுக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குற்றாலத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பது யாருடைய ரிசார்ட்டில் தெரியுமா?