Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு - குற்றாலத்துக்கு பறக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு - குற்றாலத்துக்கு பறக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
, திங்கள், 22 அக்டோபர் 2018 (15:54 IST)
தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் சென்று தங்கவுள்ளனர்.

 
18 பேர் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, இருவேறு தீர்ப்புகளை வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது நீதிபதியான நீதிபதி சத்தியநாராயணன் அவர்கள் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.
 
நீதிபதி சத்தியநாராயணன் விடுமுறையில் சென்றதால், தொடர் விடுமுறை காரணமாக அக்டோபர் 22ஆம் தேதிக்கு பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை நேரில் சென்று பார்த்தார். அதன் பின் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மற்றும் 4 ஆதரவு எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 22 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் சென்று தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 
எனவே, தங்க தமிழ்ச்செல்வன், ரத்தினா சபாபதி, பிரபு, கலைச்செல்வன், கருனாஸ் உள்ளிட்ட அனைவரும் குற்றாலம் செல்கின்றனர் என செய்தி வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோக்கன் கட்சியுடன் கூட்டணியா? தமிழிசை நக்கல் பதில்