Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் படுதோல்வி

Advertiesment
Assembly election 2016
, வியாழன், 19 மே 2016 (16:27 IST)
தமிழக சட்டசபை தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் படுதோல்வி அடைந்தார்.


 

 
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அரவங்குறிச்சி, தஞ்சாவுர் தவிர்த்து மொத்தம் 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 
 
விஜயகாந்த், இந்த முறை மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அதிமுக, திமுகவிற்கு மாற்று வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று மநகூ தலைவர்கள் கூறி வந்தனர்.
 
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே குறைவான வாக்குகளைப் பெற்று, விஜயகாந்த் மூன்றாம் இடத்திலேயே இருந்தார். 
 
தற்போது, அவர் 47,529 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் ஆர்.குமரகுரு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், விஜயகாந்தும், குமரகுருவும் எவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதியமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் வெற்றி