இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் சதவீத அடிப்படையில் ஆளும் கட்சியான அதிமுக 42 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது.
இன்று காலை 8 மணியளவில் தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கியது. அதில் துவக்கும் முதல் திமுக முன்னனியில் இருந்தது. ஆனால் போகப் போக அதிமுக ஏறு முகம் காட்டியது.
அதன்பின் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவிலும் அதிமுகவே முன்னனியில் இருந்து வருகிறது. தற்போது, அதிமுக 140 தொகுதியிலும், திமுக 70 தொகுதியிலும் முன்னனியில் இருக்கிறது.
அதாவது சதவீத அடிப்படையில் தமிழக அரசியல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் பின்வருமாறு:
அதிமுக - 42%
திமுக 29.9%,
காங்கிரஸ் - 6.6%
பாமக - 5.9%
தேமுதிக - 2.2%
பாஜக - 2.1%
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1.5
தமாகா - 1.1
நாம் தமிழர் கட்சி - 0.8
விடுதலைச் சிறுத்தைகள - 0.8
மனித நேய மக்கள் கட்சி - 0.8
சிபிஎம் - 0.7
சிபிஐ - 0.6