Publish Date: Thu, 19 May 2016 (14:07 IST)
Updated Date: Thu, 19 May 2016 (14:11 IST)
காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் தோல்வியடைந்துள்ளார்.
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது.
அதன், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை நிறுவனர் தொல்.திருமாவளவன் 83 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அந்த தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றுள்ளார்.