Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் பறிமுதல்

கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் பறிமுதல்

கண்டெய்னர் லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் பறிமுதல்
, வியாழன், 28 ஏப்ரல் 2016 (14:30 IST)
கண்டெய்னர் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கோவைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி மதிப்புடைய கம்ப்யூட்டர்களை தேர்தல் பறக்கும்படையினர் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் பறிமுதல் செய்துனர்.


 

 
சென்னையை அடுத்துளள ஸ்ரீபெரும்புதூரில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
 
இந்த தொழிற்சாலையில் இருந்து கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் ஒரு கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு கோவையில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
 
அந்த கண்டெய்னர் லாரியை திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் ஓட்டி வந்தார்.
 
இந்த கண்டெய்னர் லாரி சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தென்னங்குடிபாளையம் புறவழிச்சாலை பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
 
இந்த சோதனையின்போது, அந்த கண்டைய்னர் லாரியில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 2,150 கம்ப்யூட்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் அட்டைபெட்டிகளில் வைத்து கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, அந்த பொருட்களை அதிகாரிகள் லாரியுடன் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகின்றது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியையே கட்டி வைச்சு தோலை உரிச்சோம்; ராமதாஸ் எம்மாத்திரம் : ஆனந்தராஜ் அதிரடி