புதுச்சேரியில் 23 ஆம் தேதி பதவியேற்பு விழா
புதுச்சேரியில் 23 ஆம் தேதி பதவியேற்பு விழா
புதுச்சேரியில் 23 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களை வென்றதால் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
புதுச்சேரி முதல்வராக, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வரும் 23 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.