வெற்றிக்கனியை பறித்த 21 பெண் வேட்பாளர்கள்
வெற்றிக்கனியை பறித்த 21 பெண் வேட்பாளர்கள்
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 21 பெண் வேட்பாளர்கள் வெற்றிக்கனியை பறித்துள்ளனர்.
தமிழகத்தில், திமுக மற்றும் அதிமுக சார்பில் குறைந்த அளவே பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 21 பெண் வேட்பாளர்கள் வெற்றிக்கனியை பறித்துள்ளனர். அதன் விவரம் இதோ:-
ஜெயலலிதா - ஆர்.கே. நகர் (அதிமுக), சத்யா பன்னீர்செல்வம் - பண்ருட்டி (அதிமுக), எம்.சந்திரபிரபா -ஸ்ரீவில்லிபுத்தூர் (அதிமுக), உமாமகேஸ்வரி -விளாத்திகுளம் (அதிமுக), கீதாஜீவன் - தூத்துக்குடி (திமுக), வி.எம்.ராஜலட்சுமி - சங்கரன்கோவில் (அதிமுக), பூங்கோதை ஆலடி அருணா - ஆலங்குளம் (திமுக), விஜயதரணி - விளவங்கோடு (காங்கிரஸ்), சித்ரா - ஏற்காடு (அதிமுக), மனோன்மணி - வீரபாண்டி (அதிமுக), டாக்டர் வி.சரோஜா- ராசிபுரம் (அதிமுக), பொன்.சரஸ்வதி - திருச்செங்கோடு (அதிமுக) , கஸ்தூரி வாசு - வால்பாறை (அதிமுக), வரலட்சுமி மதுசூதனன்- செங்கல்பட்டு (திமுக), ஜெயந்திபத்மநாபன் - குடியாத்தம் (அதிமுக), டாக்டர் நீலோபர்கபீல்- வாணியம்பாடி (அதிமுக), மனோரஞ்சிதம் - ஊத்தங்கரை (அதிமுக), சீத்தாபதி சொக்கலிங்கம் - திண்டிவனம் (திமுக), எம்.கீதா -கிருஷ்ணராயபுரம் (அதிமுக), எஸ்.வளர்மதி - ஸ்ரீரங்கம் (அதிமுக), பரமேஸ்வரி முருகன் - மண்ணச்சநல்லுர் (அதிமுக) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 16 பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள். 4 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.