நம் கடன் பணி செய்து கிடப்பதே - கர்ஜிக்கும் சுப.உதயகுமார்
நம் கடன் பணி செய்து கிடப்பதே - கர்ஜிக்கும் சுப.உதயகுமார்
தேர்தல் தோல்வி குறித்து, நம் கடன் பணி செய்து கிடப்பதே என சுப.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.
அணுஉலைக்கு எதிரான போராளியும், பச்சைத் தமிழகம் கட்சி தலைவருமான சுப.உதயகுமார், ராதாபுரம் தொகுதியில் சுயோச்சையாக போாட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில், இந்த தேர்தல் குறித்து, அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்ட பதவில், எனக்காக அயராது உழைத்த அருமை நண்பர்களுக்கும், நேற்றிலிருந்து அலைபேசி, மின்னஞ்சல் வழியாக அழைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நான் ஒரு வட இந்திய பயணத்தில் இருப்பதால் பல அழைப்புக்களை ஏற்க முடியவில்லை. மன்னிக்கவும். எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்துப் பழகிவிட்டதால், நான் மகிழ்ச்சியாக, உறுதியாகவே இருக்கிறேன். நம் கடன் பணி செய்து கிடப்பதே என தெரிவித்துள்ளார்.