Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் டி.வி.யில் புதிய சீரியல்...

Advertiesment
Vijay tv
, புதன், 20 டிசம்பர் 2017 (17:13 IST)
‘நினைக்கத் தெரிந்த மனமே’ என்ற புதிய சீரியல், விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

 
கதையின் நாயகி, தீபா ஒரு விபத்தில் தனது நினைவை இழக்கின்றார். தீபா வசதியும் அன்பும் கொண்ட கணவர் மற்றும் குடும்பத்துடன் சந்தோஷமான இல்லற வாழ்வை வாழ்ந்து வருகின்றார். இருந்தும் தீபாவிற்கு தான் யார் என்பதும், அவளுடைய கடந்த கால வாழ்க்கையும் நியாபகத்தில் இல்லை. அது அவரை உறுத்திக் கொண்டும் இருக்கின்றது.
 
அடிக்கடி தீபாவுக்கு சில காட்சிகள் நினைவுகள் போல வந்து செல்லும்போது, அவருக்கு ஒரு பதட்டம் ஏற்படுகிறது. அதை தவிர்த்து அவர் தன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிக்கின்றார். ஆனால் அது நீடிக்கவில்லை. ஒருநாள் அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. அவள் உண்மை என்று நினைத்த வாழ்கை பொய் என்று தோன்றுகின்றது.
 
அவரின் கடந்த வாழ்க்கையும் அவர் குடும்பமும் யார்? தீபாவின் இந்த நிலைக்கு காரணம் என்ன? என்பதுதான் சீரியலின் கதை. டிசம்பர் 25ஆம் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு இந்த சீரியலைக் கண்டு ரசிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா; 2017 ஒரு பார்வை - இந்திய திரைப்பட வரலாற்றில் பாகுபலி 2