Publish Date: Mon, 01 Oct 2018 (10:28 IST)
Updated Date: Mon, 01 Oct 2018 (12:11 IST)
பலரும் எதிர்பார்ததது போல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ரித்விகா.தான்.
பிக்பாஸ் 2வது சீசனில் டேனியல், வைஷ்ணவி, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, அனந்த் வைத்தியநாதன், மமதி, ரம்யா, மும்தாஜ், பாலாஜி, சென்றாயன், பொன்னம்பலம், நித்யா, ஷாரிக், மமத், ரித்விகா என 16 பேர் பங்கேற்றனர்,
இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் நிகழ்ச்சி சுமாராகவே சென்றது, அதற்கு காரணம் ஏற்கனவே நடந்த பிக்பாஸ் 1 நிகழ்ச்சியை அனைவரும் பார்த்து வந்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மக்கள் தங்களை பார்க்கிறார்கள் என்ற பயம் காரணமாக எல்லோருமே நடிக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் கமலே இங்கே நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சொல்ல ஆரம்பித்தார், இதற்கிடையே கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் களைகட்டத் தொடங்கியது, தங்களுக்குள் அணிகளாக பிரிந்தார்கள், குறிப்பாக ஐஸ்வர்யா, மஹத், யாஷிகா மூவரும் நெருக்கமானார்கள். குறிப்பாக யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளானார்கள். பாலாஜி தனது கோபத்தால் கடுமையாக நடந்து கொண்டார். ஆனால், நாளாக ஆக, ஒரு நிதானமான நடந்து கொண்டார் பாலாஜி, பொன்னம்பலம் இயல்பாகவே காணப்பட்டார், அதனால் மக்களிடம் நல்ல பெயர் எடுத்தார், மும்தாஜ் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று பேசியபடி இருந்தார், சென்ராயன் வெள்ளந்தியாக பேசியதால் மக்கள் அவரை கொண்டாடினார்கள், வாரம் ஒருவர் என ஒவ்வொருவராக வெளியேறினர்,
அனந்த் வைத்தியநாதன், மமதி, ரம்யா, நித்யா, என ஒவ்வொருவராக வெளியேறினர், பொன்னம்பலம் வெளியேறும் போது, கமலே பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அழைத்துச் சென்றார்.
பிக்பாஸ் கொடுக்கப்பட்ட சர்வாதிகாரி டாஸ்க்தான் அந்த நிகழ்ச்சி நன்கு பிரபலமாக மாற்றியது, அதில் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பையை கொட்டினார், இதன் பின்னர் ஷாரிக், வைஷ்ணவி அடுத்தடுத்து வெளியேறினார்கள், அடுத்து வைல்டு கார்டு சிஸ்டம் மூலம் விஜயலட்சுமி உள்ளே வந்தார். ஒருகட்டத்தில் மஹத், டேனியல் வெளியேறினார்கள், அதுவரை நிகழ்ச்சியில் இருந்த ஜாலியான, கேலி கிண்டல்கள் குறைந்து போனது, இதையடுத்து நிகழ்சசியை சுவாஸ்யமாக்க பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் உள்ளே வரவழைக்கப்பட்டனர், ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவுகள் வரும் போது பாசப்பிணைப்பால் கண்ணீர் மழையில் நனைந்தார்கள், மும்தாஜின் அம்மா தனது மகளை எண்ணி பெருமைப்பட்டார், பாலாஜியிடம் ஐஸ்வர்யாவின் அம்மா மன்னிப்பு கேட்டார், அதன் பின்னர் சென்ராயன், பாலாஜி, யாஷிகா உள்ளிட்டோர் வெளியேறினர்.
கட்டக்கடைசியாக, ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா என நான்குபேர்தான் பிக்பாஸ் வின்னர் போட்டிக்கு, வீட்டுக்குள் இருந்தார்கள்.
அதில், ஜனனி நேற்றே வெளியேறினார். அடுத்து இன்றைய நிகழ்ச்சியில் ஆரவ், பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று விஜயலட்சுமியை அழைத்துச் சென்றார்.
அடுத்து, ஐஸ்வர்யா, ரித்விகா, இதில் ரித்விகாவை பிக்பாஸ் 2 வது சீசனின் வின்னராக அறிவித்தார் கமல். நெகிழ்ந்து அழுதே விட்டார் ரித்விகா. நேயர்கள் மிகுந்த கரவொலி எழுப்பினார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ஐஸ்வர்யா உட்பட எல்லோருமே பாராட்டிக் கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.
VM
Publish Date: Mon, 01 Oct 2018 (10:28 IST)
Updated Date: Mon, 01 Oct 2018 (12:11 IST)