Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டோஷூட் புகழ் ரம்யா பாண்டியன் – சின்னத்திரையில் !

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (12:03 IST)
கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் விதவிதமாக சேலை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் இப்போது சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார்.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சமூகவலைதளங்களில் விதவிதமாக புடவைகளை அணிந்து புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனாலும் அவருக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இதையடுத்து இப்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளிஸ் என்ற சமையல் சம்மந்தமான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. பட வாய்ப்புகள் இல்லாததாலேயே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவர் கவனம் செலுத்த முயற்சித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments