நீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்!!

சனி, 19 அக்டோபர் 2019 (16:15 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கோபிநாத் இப்போது ஹீரோவகியுள்ளார். 
 
இதுநாள் வரை கோபிநாத்தை டிவி பார்த்தவர்கள் இனி அவரை வெல்ளித்திரையும் பார்க்கலாம். ஆம், நியா நானா கோபிநாத் தற்போது இயக்குனர் பாரதி கணேஷ் இயக்கும் படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். 
 
தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான கண்ணுபட போகுதய்யா,  யுத்தம் என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியுள்ள பாரதி கணேஷ் அடுத்து இயக்க இருக்கும் படம் ’இது எல்லாத்துக்கும் மேல’. இந்த படத்தில்தான் கோபிநாத் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். 
 
இந்த படத்தில் கோபிநாத்துடன் இணைந்து சதீஷ், அக்ஸிதா, ராகுல், ஷோபன், மவுரியா, ஆதித்யா ஆகியோர் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விஜய் மாதிரி உங்களால் செய்ய முடியுமா? சவால் விட்ட ஏஜிஎஸ் - தெறிக்கவிட்ட புல்லிங்கோ!