Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரியங்கா VS மணிமேகலை பிரச்சனைக்கு சுஜிதா காரணமா.? பகீர் கிளப்பும் அதிர்ச்சி வீடியோ.!!

Advertiesment
Priyanka Manimegalai

Senthil Velan

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (15:40 IST)
குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் மணிமேகலையை விட சிறந்த தொகுப்பாளர் பிரியங்கா தான் என சுஜிதா பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. 
 
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த 4 சீசனாக கோமாளியாகவும், இந்த சீசனில் தொகுப்பாளராகவும்  மணிமேகலை இருந்து வந்தார்.   இந்த நிகழ்ச்சியின் போது பிரியங்கா தான் ஒரு போட்டியாளர் என்பதை மறந்து, தொகுப்பாளினி மணிமேகலையை டாமினேட் செய்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் செமி ஃபைனல் நிகழ்ச்சியில் இருந்து பாதிலேயே வெளியேறிய மணிமேகலை சமூக வலைத்தளத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறி போட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை பெரிய அளவில் பேசும்பொருளாகியுள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு தீ பொறி காரணமாக அமைந்தது சுஜிதா தான் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. .
 
நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட  நடுவர்கள் மற்றும் குக் ஆக கலந்து கொண்ட பிரபலங்களை மணிமேகலை சரியாக வரவேற்கவில்லை. அவருக்கு வரவேற்க தெரியவில்லை என நிகழ்ச்சியின் போட்டியாளர் சுஜிதா சூசகமாக பேசி பிரியங்கா தான் சிறந்த தொகுப்பாளர் என உயர்த்தி பேசியிருந்தார்.
 
பிரியங்கா தான் சீனியர் ஆங்கர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருக்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார் என்பதை பாருங்கள் எனவும் கூறி மணிமேகலையை அமைதியாக இருக்க கூறி பிரியங்காவை தொகுத்து வழங்க சொன்னார். உடனே, பிரியங்காவும் தன்னுடைய ஸ்டைலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது போல் நடித்துக்காட்டினார்.
 
உடனடியாக, நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் மணிமேகலை கையை பிடித்து கீழே இறங்க சொன்னார். பின் செப் தாமுவும் நகைச்சுவையாக, இனிமேல் இந்த நிகழ்ச்சிக்கு ஒரே ஒரு ஆங்கர் என்றால் அது பிரியங்கா தான் என கூறினார். இதனை கேட்ட மணிமேகலை சற்று வேதனையுடன் அந்த முகத்தை மறைத்துக்கொண்டு வெளியே சிரித்ததாக கூறப்படுகிறது.
 
இதுபோன்று, பல சமயங்களில் நடந்த காரணத்தால், என்னவோ மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் தன்னை வேலை செய்யவிடாமல் பிரியங்கா ஆதிக்கம் செலுத்தியதாக பெயரை குறிப்பிடாமல் கூறி, தனக்கு பணம் விட சுயமரியாதை தான் முக்கியம் எனக்கூறி விலகி இருந்தார். 

 
பிரச்சனை வருவதற்கும், மணிமேகலை மனதில் வேதனை ஏற்பட்ட முதல் காரணத்திற்கும் சுஜிதா தான் பிரச்னையைத் தூண்டிவிட்ட காரணம் எனவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடாமுயற்சி படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?... காத்திருந்த ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்!