ராயபுரம் பகுதியில் அவனின்றி லாரி மூலம் ஏற்றி வந்த கேஸ் அடுப்புகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை ராயபுரம் பகுதியில் எஸ். என். செட்டி சாலையில் பறக்கும் படை அதிகாரி அப்துல் ரவூப் தலைமையில் தலைமை காவலர் தனலட்சுமி ஆகியோர் சோதனை தனது ஊழியர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த மினி டெம்போ லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 251 கேஸ் அடுப்புகள் இருப்பது தெரியவந்தது இதை அடுத்து எந்தவித ஆவணமும் இன்றி எடுத்து வரப்பட்ட கேஸ் அடுப்புகளை கொண்டுவந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து டிரைவரிடம் ஆவணத்தை கேட்டபோது ஆவணம் இல்லாமல் லாரி மூலம் கேஸ் அடுப்புகளை கொண்டுவந்துள்ளது தெரியவந்தது, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு கொண்டுவரப்பட்டு உள்ளதா என்று சந்தேகம் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து மூலக்கொத்தளம் சென்னை மண்டல 5 அலுவலகத்தில் வாகனத்தை கொண்டுவரப்பட்டு தேர்தல் அதிகாரியான ரா. பேபி இடம் ஒப்படைக்கப்பட்டது இதை அடுத்து தேர்தல் அதிகாரி வாகனத்தை சோதனையிட்டு பின்னர் புரசைவாக்கம் தாசில்தார் பவானி இடம் ஒப்படைத்தார் இதில் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.