Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயந்து தொகுதி பக்கமே வராத ஸ்டாலின்... ஜெயகுமார் கிண்டல்!

Advertiesment
பயந்து தொகுதி பக்கமே வராத ஸ்டாலின்... ஜெயகுமார் கிண்டல்!
, வெள்ளி, 19 மார்ச் 2021 (18:41 IST)
நான் கடல், ஆறு, குளம் என அனைத்திலும் நீந்தி பழக்கப்பட்டவன் என அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரத்தின் போது பேட்டி. 

 
ராயபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று 3 வது நாளாக சைக்கிள் ரிக் ஷா வில் அமர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வரும் வழியில் பெண்கள் குழந்தைகள் என நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராயபுரத்தின் திமுக வேட்பாளர் நீந்த தெரியாதவர்.என்றும் நான் கடல், ஆறு, குளம் என அனைத்திலும் நீந்தி பழக்கப்பட்டவன். ராயபுரம் மட்டும் இல்லை தமிழகம் முழுவதும் அதிமுக அரசு அமையும். இந்த தொகுதியில் பெருவரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.
 
என்னை எதிர்த்து போட்டியிட முடியுமா என்று ஸ்டாலினிடம் சொன்னேன்,  அவர் பயந்து இந்த தொகுதிக்கு வரவில்லை என்றும் இந்த தொகுதியில் திமுக சார்பில் சாதாரண தொண்டனை நிறுத்தினால் அவர் வெற்றி பெறுவார் என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்தார். ஆனால் தற்போது பணம் படைத்தவரை இந்த தொகுதியில் திமுக நிறுத்தியுள்ளது.
 
தொடர்ந்து இன்னும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சியில் சமுக நீதி பதிக்கப்பட்டது, இஸ்லாமியருக்கு பாதுகாப்பு இல்லமால் இருந்தது. இஸ்லாமிய மக்கள் அதை எல்லாம் மறக்க மாட்டார்கள, டிசம்பர் 6 வந்தால் திமுக ஆட்சியில் பயந்து தான் இருப்பார்கள் இஸ்லாமியர்கள். 
 
திமுக என்றால் ஊழல் ஆட்சி. திமுக ஆட்சியில் ஸ்டாலினால் மதுரைக்கு போக முடியாது, அதிமுக ஆட்சி வந்த பிறகு தான் அவர் மதுரைக்கு போகிறார். தமிழக மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். முன்னதாக ரிக் ஷா வில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் இஸ்லாமியர்  ஒருவருடன் இணைந்து மேளம் அடித்தபடி இஸ்லாமிய பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமான் டெபாசிட் கூட வாங்க மாட்டார்: 5,000 பேருடன் மாஸ் காட்டிய திமுக வேட்பாளர் !!