Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னி: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021

Advertiesment
கன்னி: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021
, வியாழன், 18 நவம்பர் 2021 (17:58 IST)
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - சில காரியங்களில் வெற்றி சில காரியங்களில் தோல்வி என்று மாறி மாறி அனுபவிக்கும் கன்னி ராசியினரே இந்த மாதம் மத்தியில் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்து முடியும். அலைச்சல்கள் குறையும். செலவு அதிகரிக்கும் அதே நேரத்தில் வரவும் இருக்கும். உடல் ஆரோக்யம் பெறும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும். எதிர்ப்புகள் அகலும். 

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். தொழில் விருத்தியடையும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக பணியாளர்களின்  ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். 
 
குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். 
 
உத்திரம் 2, 3, 4:
பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.  புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.
 
அஸ்தம்:
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.
 
சித்திரை 1, 2:
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்டு அதன்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். 
 
பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். 
சந்திராஷ்டம தினங்கள்: நவம் 17, 18, 19, டிசம் 16
அதிர்ஷ்ட தினங்கள்:  நவம் 29, 30.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்மம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021