Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்மம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021

Advertiesment
சிம்மம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021
, வியாழன், 18 நவம்பர் 2021 (17:53 IST)
(மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) - சாமர்த்தியமாக திட்டமிட்டு எதிலும் ஈடுபடும் சிம்ம ராசியினரே இந்த மாதம் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும். சாதகமான பலன்கள் இருக்கும்.


விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்பீர்கள். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். 
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி ஓரளவு நல்ல ஒற்றுமையுடன் வாழ நேரிடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். 
 
மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். 
 
மகம்:
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். 
 
பூரம்:
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள்  பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். 
 
உத்திரம் 1:
உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். தொழில் வியாபாரம்  தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
 
பரிகாரம்: ஞாயிற்றுகிழமையில் நவகிரகத்தில் சூரியனை வணங்கி கோதுமையால் செய்யப்பட்ட உணவு பொருளை நைவேதியம் செய்து ஏழைகளுக்கு வணங்க காரிய தடை நீங்கும். எதிலும் வெற்றி கிடைக்கும். 
சந்திராஷ்டம தினங்கள்: டிசம் 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்:  நவம் 27, 28.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடகம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021