Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துலாம்: மார்கழி மாத ராசி பலன்கள்

Advertiesment
துலாம்: மார்கழி மாத ராசி பலன்கள்
, புதன், 16 டிசம்பர் 2020 (14:42 IST)
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்) - கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது, சுக்ரன் - தைரிய ஸ்தானத்தில் சனி,சூர்யன், புதன், சந்திரன் - சுகஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில்  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.  

கிரகமாற்றங்கள்:
 
26-12-20 அன்று காலை 5.22 மணிக்கு சனி பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
30-12-20 அன்று இரவு 2.22 மணிக்கு புதன் பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
06-01-21 அன்று காலை 07.18 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். வீண் பகை உண்டாகலாம்.  நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.
 
குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
 
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண்  அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது  நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.
 
பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 
 
மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது
 
கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன  பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.
 
.அரசியலில் உள்ளவர்கள் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது.  தொகுதியில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. 
 
சித்திரை:
இந்த மாதம் பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். வாடிக்கையாளர்களிடம்  அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது  வியாபாரம் நன்கு நடக்க உதவும்.
 
ஸ்வாதி:
இந்த மாதம் பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.  பயணங்களின் போதும் வாகனங்களை  ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
 
விசாகம்:
இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
 
பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு 
சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: டிசம்பர் 20, 21.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னி: மார்கழி மாத ராசி பலன்கள்